NEWZ [.LK]
NEWZ [.LK]
Business

Pay&Go நிறுவனம் செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் இணைந்து கடன் மீள்கொடுப்பனவை எளிதாக்குகிறது

Sandun Senevirathne Junior Editorial Associate
9/14/20264 MINS
Pay&Go நிறுவனம் செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் இணைந்து கடன் மீள்கொடுப்பனவை  எளிதாக்குகிறது

The partnership lets Sejaya's micro-entrepreneur clients repay loans through Pay&Go's kiosks, app, and POS network.

இப்பங்குடமையானது, செஜயாவின் நுண்-தொழில்முனைவோர் வாடிக்கையாளர்கள் Pay&Go இன் Kiosks இயந்திரங்கள், கையடக்கச் செயலி (App) மற்றும் POS வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாகத் தங்களது கடன்களை மீளச்செலுத்த வசதியளிக்கிறது.

Pay&Go நிறுவனத்தை இயக்கும் MegaPay (Pvt) Ltd, ஜப்பானின் Gojo & Company Inc. இன் முழுமையான துணை நிறுவனமும், நாடு முழுவதும் 55க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் சேவையாற்றி வரும் உரிமம் பெற்ற நுண்நிதி நிறுவனமுமான செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. இப்பங்குடமையானது, செஜயாவின் வாடிக்கையாளர்கள் தங்களது கடன் தவணைக் கட்டணங்களை மிகவும் விரைவாக மீளச்செலுத்துவதற்கான வழியை வழங்குவதுடன், நிதியியல் உள்ளடக்கம் தொடர்பான இரு நிறுவனங்களினதும் அர்ப்பணிப்புக்கு உறுதுணையாகவும் அமைகின்றது.

செஜயாவின் வாடிக்கையாளர்கள் இனி Pay&Go இன் கையடக்கச் செயலி, நாடு முழுவதிலும் பரந்துள்ள 1,000 இற்கும் மேற்பட்ட Kiosks இயந்திரங்கள் அல்லது நாடு முழுவதிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் கிடைக்கப்பெறும் Pay&Go POS இயந்திரங்கள் ஊடாகத் தங்களது கடன் தவணைகளை மீளச் செலுத்த முடியும். வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமின்றி, 24/7 மணிநேரமும் கட்டணங்களை மீளச் செலுத்த முடிவதுடன், உடனடி டிஜிட்டல் பற்றுச்சீட்டுக்கள் மற்றும் கொடுப்பனவு உறுதிப்படுத்தல்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

"ஒவ்வொரு இலங்கையருக்கும் கொடுப்பனவுச் சேவைகளை இலகுவில் அணுகக் கூடியதாக மாற்றுவதே எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இப்பங்குடமையானது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும். செஜயா நிறுவனத்துடன் இணைந்து, இந்தச் சௌகரியமான சேவையை மிகவும் அவசியமாக தேவைப்படுபவர்களின் கரங்களில் நேரடியாகக் கொண்டு சேர்க்கின்றோம்." என MegaPay (Pvt) Ltd இன் பொதுப் பணிப்பாளர் திரு. வர்தன் அஸ்லிபெக்யான் கூறினார்.

செஜயாவிடம் கடன் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் சில்லறைக் கடைகள், தையல் நிலையங்கள் மற்றும் ஏனைய சிறு தொழில்களை நடத்தும் சுயதொழில்முனைவோராவர். "மீளச்செலுத்திவளர்வோம்" ("Repay & Grow") எனும் புதிய முன்முயற்சியின் ஊடாக, இவ்வாடிக்கையாளர்களுக்கு Pay&Go POS தீர்வுகளை விரிவாக்குவதற்கான வழிகளை இரு நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன. இத்திட்டமானது செஜயா கடன் பெறுநர்கள் தங்களது சொந்தக் கடைகளிலேயே அட்டை (Card) மற்றும் பட்டியல் கட்டணக் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள வழிவகுப்பதை நோக்கமாக்க கொண்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மேலதிக விவரங்கள் அது முன்னெடுக்கப்படும் போது அறியத்தரப்படும்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரிஸாந்த் பிரான்சிஸ், "எமதுவாடிக்கையாளர் அவர்களின் வாழ்வியலுக்கேற்ப செயற்படும்நிதிச் சேவைகளுக்கே அவர்கள் உரித்தானவர்கள்; மாறாக நிதிச் சேவைகளுக்கு ஏற்ப அவர்களின் வாழ்வியல் மாறிவிடுதல் நன்றன்று. அதை Pay&Go இன்று சாத்தியமாகியுள்ளது." என்று கூறினார்.

கொடுப்பனவுத் தொழில்நுட்பம் ஊடாக பணமில்லாப் பரிவர்த்தனைகளை (Cashless transactions) அதிகரித்தல், நிதியியல்சார் அறிவை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் கூட்டு அவதானம் செலுத்தி, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளலை விரிவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இரு நிறுவனங்களும் கலந்துரையாடின.

செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு முதல் "எவரையும் பின்தள்ளி விடக்கூடாது" ("leave no one behind") எனும் நல்நோக்குடன் இயங்கி வருவதுடன், உள்ளடக்கப்பட்ட நிதியியல் சேவைகள் ஊடாகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் நுண்-தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து வருகின்றது. Pay&Go இன் Kiosk வலையமைப்பு, கையடக்கச் செயலி மற்றும் POS உள்கட்டமைப்பு ஆகியவை டிஜிட்டல் கொடுப்பனவுச் சேவைகளைத் தேவையான சமூகங்களுக்கு அருகாமையில் கொண்டு சேர்ப்பதன் மூலம் அந்நோக்கை மேலும் விரிவுபடுத்துகின்றன.

Pay&Go என்பது இலங்கையின் முன்னணி கொடுப்பனவுத் தொழில்நுட்பத் தளமாகும். இது தனது கையடக்கச் செயலி, POS வலையமைப்பு, Kiosks இயந்திரங்கள் மற்றும் இணையச் சேவைகள் ஊடாக ஒருங்கிணைந்த டிஜிட்டல் மற்றும் பௌதிகக் கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்கி வருகின்றது.

செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனம் என்பது 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உரிமம் பெற்ற நுண்கடன் நிறுவனமாகும். இது ஜப்பானின் Gojo & Company Inc. இன் முழுமையான துணை நிறுவனமாகும். செஜயா, நிதி அணுகலினூடான சமூகப் பொறுப்புணர்வை முதன்மையாகக் கொண்டு, இலங்கை முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு உள்ளடக்கிய நிதியியல் சேவைகளை வழங்கி வருகின்றது. "எவரையும் பின்தள்ளி விடக்கூடாது" என்ற நல்நோக்கின் கீழ் இயங்கும் இந்நிறுவனம், சமூக மூலதனத்தைக் கட்டியெழுப்புதல், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களின் வறுமையைக் குறைத்தல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருகின்றது.

தொடர்புடைய கட்டுரைகள்

XpressJobs Recognised at Sri Lanka’s First National AI Awards for Agentic AI Innovation
Business

XpressJobs Recognised at Sri Lanka’s First National AI Awards for Agentic AI Innovation

10/1/2026
InTalent Asia’s “Toxic Boss” Campaign Wins Two Bronze Awards at SLIM DIGIS 2.6
Business

InTalent Asia’s “Toxic Boss” Campaign Wins Two Bronze Awards at SLIM DIGIS 2.6

9/30/2026
Vision Care Hearing Solutions Launches Hearing Ambassador Programme
Business

Vision Care Hearing Solutions Launches Hearing Ambassador Programme

9/29/2026
Digital Breakers Secures Gold and Three Additional Awards at SLIM DIGIS 2026 for Abans “Only Fans” Campaign
Business

Digital Breakers Secures Gold and Three Additional Awards at SLIM DIGIS 2026 for Abans “Only Fans” Campaign

9/28/2026
XpressJobs Named Official Recruitment Partner of Sri Lanka Skills Expo 2026
Business

XpressJobs Named Official Recruitment Partner of Sri Lanka Skills Expo 2026

9/28/2026
Gunda Power backs proposed night-time tariff for Sri Lanka's solar sector
Business

Gunda Power backs proposed night-time tariff for Sri Lanka's solar sector

9/25/2026
Ceyline Group unveils ‘Roots for the Future’ national reforestation initiative to celebrate 40th Anniversary
Business

Ceyline Group unveils ‘Roots for the Future’ national reforestation initiative to celebrate 40th Anniversary

9/24/2026
Hithawathi Teens Hub Expansion Project by FOUNDATION.LK bags Gold at NPMEA 2026
Business

Hithawathi Teens Hub Expansion Project by FOUNDATION.LK bags Gold at NPMEA 2026

9/24/2026
Softlogic GLOMARK இன் “ගෙට Better Life” பிரச்சாரம்  Dragons of Sri Lanka 2026 விருது விழாவில் தங்க விருதை வென்றுள்ளது
Business

Softlogic GLOMARK இன் “ගෙට Better Life” பிரச்சாரம் Dragons of Sri Lanka 2026 விருது விழாவில் தங்க விருதை வென்றுள்ளது

9/24/2026
Storex Renewables Partners with World's No. 1 Sigenergy to Answer Sri Lanka's Solar Policy Shift
Business

Storex Renewables Partners with World's No. 1 Sigenergy to Answer Sri Lanka's Solar Policy Shift

9/24/2026
கண்டி மற்றும் பதுளையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆதரவளிக்க டோக்கியோ சீமெந்து முன்வருகை
Business

கண்டி மற்றும் பதுளையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆதரவளிக்க டோக்கியோ சீமெந்து முன்வருகை

9/23/2026
Fairfirst named Best Marine Insurance Company in Sri Lanka 2026
Business

Fairfirst named Best Marine Insurance Company in Sri Lanka 2026

9/21/2026
LEVEL UP 2.0 strengthens Imperial College’s position as a platform for professional growth in Kandy
Business

LEVEL UP 2.0 strengthens Imperial College’s position as a platform for professional growth in Kandy

9/16/2026
Payments.lk by Payable takes on traditional payment gateways by offering zero monthly fees, lowest published rates
Business

Payments.lk by Payable takes on traditional payment gateways by offering zero monthly fees, lowest published rates

9/16/2026
Rivon Agriglobe and Rivon Lanka Introduce ZETOR, Agriglobe Tractors and Rover E-Bikes to Sri Lankan Market
Business

Rivon Agriglobe and Rivon Lanka Introduce ZETOR, Agriglobe Tractors and Rover E-Bikes to Sri Lankan Market

9/15/2026
TOKYO SUPERMIX இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் மூன்று கௌரவிப்புகளை சுவீகரிப்பு
Business

TOKYO SUPERMIX இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் மூன்று கௌரவிப்புகளை சுவீகரிப்பு

9/14/2026
MullenLowe Group Sri Lanka Becomes BBDO Sri Lanka
Business

MullenLowe Group Sri Lanka Becomes BBDO Sri Lanka

9/14/2026
Surge Acquires Majority Stake in IDEA8 to Launch Surge Robotics
Business

Surge Acquires Majority Stake in IDEA8 to Launch Surge Robotics

9/14/2026
BestWeb.LK 2026 Crowns Sri Lanka’s Best Websites at Grand Awards Night
Business

BestWeb.LK 2026 Crowns Sri Lanka’s Best Websites at Grand Awards Night

9/13/2026