NEWZ [.LK]
NEWZ [.LK]
Business

Softlogic GLOMARK இன் “ගෙට Better Life” பிரச்சாரம் Dragons of Sri Lanka 2026 விருது விழாவில் தங்க விருதை வென்றுள்ளது

Sandun Senevirathne Junior Editorial Associate
9/24/20263 MIN READ
Softlogic GLOMARK இன் “ගෙට Better Life” பிரச்சாரம்  Dragons of Sri Lanka 2026 விருது விழாவில் தங்க விருதை வென்றுள்ளது

Softlogic GLOMARK, has been recognised at the Dragons of Sri Lanka Awards 2026

இலங்கையின் முன்னணி சுப்பர் மார்க்கெட் வலையமைப்புகளில் ஒன்றான Softlogic GLOMARK, Dragons of Sri Lanka 2026 விருது விழாவில், விசுவாசம் & வாடிக்கையாளர் உள்ளீர்ப்பு மற்றும் தயாரிப்பு மறுஅறிமுகம் ஆகிய பிரிவுகளுக்காக முறையே தங்க மற்றும் Black Dragon விருதுகளை வென்றுள்ளது. இவ்விருதானது, இலங்கை நுகர்வோரின் மாறிவரும் தேவைகளுடன் GLOMARK எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுகின்றது என்பதில் ஏற்பட்டுள்ள திட்டமிட்ட மூலோபாய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. வசதி அல்லது விலையை மட்டுமே தனித்து முதன்மையாகக் கொண்டு போட்டியிடாமல், GLOMARK நிறுவனம் “உங்கள் இல்லத்திற்கு சிறந்ததொரு வாழ்க்கை” (ගෙට Better Life) என்ற நோக்கம் சார்ந்த முன்மொழிவை உருவாக்கி, வாடிக்கையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஆரோக்கியமான, மிகவும் சிரத்தையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தெரிவுகளை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக தங்களது அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் கொள்வனவை மறுசீரமைத்துள்ளது.

தேசிய அளவில் “ගෙට Better Life” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்பிரச்சாரம், ஒரு துடிப்பான வணிக விளம்பரம் மற்றும் மனதில் பதியும் விளம்பரப் பாடல் மூலம் இந்த முன்மொழிவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. பின்னர், வெறும் விளம்பரமாக மட்டும் நின்றுவிடாமல், இது வாடிக்கையாளர்களின் கொள்வனவு அனுபவம் வரை விரிவுபடுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சிறந்த தெரிவுகளை மிக எளிதாகக் கண்டறியவும், அணுகவும், மற்றும் பின்பற்றவும் ஏதுவாக பயிற்சி பெற்ற ஊழியர்கள், பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பு வரிசைப்படுத்தல்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட உள்ளகச் சூழல் ஆகியவை வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்த மூலோபாயம் அளவிடக்கூடிய வணிக முடிவுகளைக் கொடுத்துள்ளதோடு, தொடர்ச்சியாக விசுவாசமாகவுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 21 சதவீதத்தாலும், வாடிக்கையாளர்களின் வருகை 33 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதுடன், GLOMARKற்கு அடிக்கடி வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் வளர்ச்சியைக் கண்டுள்ளது. தனியாக விலை அல்லது வசதியை மட்டும் கொண்டு போட்டியிடுவதை விட, பொருத்தப்பாடு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்க முடியும் என்பதை இந்த முடிவுகள் நிரூபிக்கின்றன.

Softlogic GLOMARK நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டெரி ஓ'கொனர் (Terry O’Connor) கருத்துத் தெரிவிக்கையில்:“இந்த விருது எங்களது நீண்டகால மூலோபாயம் வெற்றிகரமாகச் செயற்படுவதைக் காட்டுகின்றது. வாடிக்கையாளர்கள் வசதிக்காகவோ அல்லது மலிவானது என்பதற்காகவோ அன்றி, எமது வர்த்தகநாமம் அவர்களது வாழ்க்கையை உண்மையிலேயே மேம்படுத்துவதால் மட்டுமே GLOMARK ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் இப்பயணத்தை ஆரம்பித்தோம். இதன்மூலம் தொழில்துறை அங்கீகாரத்திலும், உண்மையான வணிக வளர்ச்சியிலும் பிரதிபலிப்பதைக் காண்பது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதுடன், GLOMARK இன் எதிர்காலத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான எமது நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்துகிறது” என்றார்.

Softlogic GLOMARK நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமிந்திரி பிலிமத்தலாவ கூறுகையில்: “எமது வாடிக்கையாளர்கள் தற்பொழுது ஆரோக்கியம் குறித்து அதிக விழிப்புணர்வுடன், மிகவும் சிந்தித்து சிறந்த தெரிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அங்கீகாரம் எமது வர்த்தகநாம மூலோபாயம் இந்த மாற்றத்திற்குச் சிறந்த முறையில் பதிலளிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு வரிசைப்படுத்தலையும் நாம் கவனமாக வடிவமைத்து, வாடிக்கையாளர்களை அதனூடாக வழிநடத்தும்போது, அவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த நாம் உதவுகிறோம் என்று நம்புகிறோம். அந்த வகையில், நாங்கள் ஒரு சுப்பர் மார்க்கெட் என்பதற்கும் அப்பால் விளங்குகின்றோம். இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை நல்வழியில் வழிநடத்தும் திறன் எமக்கு உள்ளதுடன், அந்தப் பொறுப்பை நாம் மிகவும் சிரத்தையுடன் மேற்கொள்ளுகிறோம். ‘ගෙට Better Life’ என்பது ஒரு விளம்பரப் பிரச்சாரத் தருணமாக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது GLOMARK எதைக் குறிக்கிறது என்பதன் அடிப்படை மறுசீரமைப்பைக் குறிக்கிறது. இது வெறும் வாடிக்கையாளர் வருகையை மாத்திரம் அதிகரிப்பதற்காக அல்லாமல், அவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் விசுவாசத்தை வென்றெடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Softlogic GLOMARK நிறுவனத்தின் வர்த்தக மற்றும் விநியோகச் சங்கிலி பணிப்பாளர் திலோகா மாரசிங்க கூறுகையில்: “எமது விநியோகஸ்தர்களையும் பங்காளர்களையும் இந்நோக்கத்தினூடு ஒன்றிணைத்துள்ளதுடன், இதில் பங்களிக்குமாறு அவர்களை தீவிரமாக ஊக்குவிக்கிறோம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எமது பெரும்பாலான வரிசைப்படுத்தல்களை ‘சிறந்த வாழ்க்கைக்கான’ (Better Life) வரிசைப்படுத்தல்களாக மாற்றுவதே எமது இலட்சியமாகும். பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகள் முதல் கடைகளுக்குள் வழங்கப்படும் வழிகாட்டல்கள் வரை, ஒவ்வொரு முடிவும் சிறந்த தெரிவுகளை மிக எளிதான தெரிவுகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. விசுவாசமான வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான வருகை இந்த அணுகுமுறை வெற்றி பெற்றுள்ளதை எமக்குக் காட்டுகிறது” என்றார்.

Softlogic GLOMARK இலங்கையின் சில்லறை வர்த்தகத் துறையில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதுடன், வரும் நவம்பர் மாதத்தில் தனது எட்டாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ளது. இந்நிறுவனம் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், சில்லறை வர்த்தகம், நிதிச் சேவைகள், வாகனங்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்துறை வர்த்தகங்களைக் கொண்ட முன்னணி கூட்டு நிறுவனமான Softlogic Holdings PLC இன் ஒரு அங்கமாகும்.

தொடர்புடைய கட்டுரைகள்

XpressJobs Recognised at Sri Lanka’s First National AI Awards for Agentic AI Innovation
Business

XpressJobs Recognised at Sri Lanka’s First National AI Awards for Agentic AI Innovation

10/1/2026
InTalent Asia’s “Toxic Boss” Campaign Wins Two Bronze Awards at SLIM DIGIS 2.6
Business

InTalent Asia’s “Toxic Boss” Campaign Wins Two Bronze Awards at SLIM DIGIS 2.6

9/30/2026
Vision Care Hearing Solutions Launches Hearing Ambassador Programme
Business

Vision Care Hearing Solutions Launches Hearing Ambassador Programme

9/29/2026
Digital Breakers Secures Gold and Three Additional Awards at SLIM DIGIS 2026 for Abans “Only Fans” Campaign
Business

Digital Breakers Secures Gold and Three Additional Awards at SLIM DIGIS 2026 for Abans “Only Fans” Campaign

9/28/2026
XpressJobs Named Official Recruitment Partner of Sri Lanka Skills Expo 2026
Business

XpressJobs Named Official Recruitment Partner of Sri Lanka Skills Expo 2026

9/28/2026
Gunda Power backs proposed night-time tariff for Sri Lanka's solar sector
Business

Gunda Power backs proposed night-time tariff for Sri Lanka's solar sector

9/25/2026
Ceyline Group unveils ‘Roots for the Future’ national reforestation initiative to celebrate 40th Anniversary
Business

Ceyline Group unveils ‘Roots for the Future’ national reforestation initiative to celebrate 40th Anniversary

9/24/2026
Hithawathi Teens Hub Expansion Project by FOUNDATION.LK bags Gold at NPMEA 2026
Business

Hithawathi Teens Hub Expansion Project by FOUNDATION.LK bags Gold at NPMEA 2026

9/24/2026
Storex Renewables Partners with World's No. 1 Sigenergy to Answer Sri Lanka's Solar Policy Shift
Business

Storex Renewables Partners with World's No. 1 Sigenergy to Answer Sri Lanka's Solar Policy Shift

9/24/2026
கண்டி மற்றும் பதுளையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆதரவளிக்க டோக்கியோ சீமெந்து முன்வருகை
Business

கண்டி மற்றும் பதுளையில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆதரவளிக்க டோக்கியோ சீமெந்து முன்வருகை

9/23/2026
Fairfirst named Best Marine Insurance Company in Sri Lanka 2026
Business

Fairfirst named Best Marine Insurance Company in Sri Lanka 2026

9/21/2026
LEVEL UP 2.0 strengthens Imperial College’s position as a platform for professional growth in Kandy
Business

LEVEL UP 2.0 strengthens Imperial College’s position as a platform for professional growth in Kandy

9/16/2026
Payments.lk by Payable takes on traditional payment gateways by offering zero monthly fees, lowest published rates
Business

Payments.lk by Payable takes on traditional payment gateways by offering zero monthly fees, lowest published rates

9/16/2026
Rivon Agriglobe and Rivon Lanka Introduce ZETOR, Agriglobe Tractors and Rover E-Bikes to Sri Lankan Market
Business

Rivon Agriglobe and Rivon Lanka Introduce ZETOR, Agriglobe Tractors and Rover E-Bikes to Sri Lankan Market

9/15/2026
TOKYO SUPERMIX இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் மூன்று கௌரவிப்புகளை சுவீகரிப்பு
Business

TOKYO SUPERMIX இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் மூன்று கௌரவிப்புகளை சுவீகரிப்பு

9/14/2026
MullenLowe Group Sri Lanka Becomes BBDO Sri Lanka
Business

MullenLowe Group Sri Lanka Becomes BBDO Sri Lanka

9/14/2026
Pay&Go நிறுவனம் செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் இணைந்து கடன் மீள்கொடுப்பனவை  எளிதாக்குகிறது
Business

Pay&Go நிறுவனம் செஜயா மைக்ரோ கிரெடிட் நிறுவனத்துடன் இணைந்து கடன் மீள்கொடுப்பனவை எளிதாக்குகிறது

9/14/2026
Surge Acquires Majority Stake in IDEA8 to Launch Surge Robotics
Business

Surge Acquires Majority Stake in IDEA8 to Launch Surge Robotics

9/14/2026
BestWeb.LK 2026 Crowns Sri Lanka’s Best Websites at Grand Awards Night
Business

BestWeb.LK 2026 Crowns Sri Lanka’s Best Websites at Grand Awards Night

9/13/2026